Thursday, September 02, 2004

நம்பிக்கையே நல்லது..எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது..

எத்தனை சத்தான வரிகள். சிகரம் படத்தில் நடிகர் சார்ளி படுவதாக அமையும் இப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். இதுவும் என் அபிமான கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான். இந்தப்பாடலின் இறுதி வரிகளில் உலகில் எதை நீ இழந்தலும் இயற்கை உன்னை வெறுப்பதிலை. அது வேறுபாடு காட்டுவதில்லை என்ற வரிகள் நிச்சயம் நிரந்தரமானவை.



சந்தர்ப்பம்: அவன் காத்திருந்தான். என்றேனும் ஒரு நாள் பாடகனாகிவிட முடியும் என்ற நகர்த்த முடியாத நம்பிக்கையிலிருந்த்தான். வந்தது வாய்ப்பு.ஆனந்தக் கண்ணீர் ஒலிபெருக்கியில் தெறிக்க உருகிப்பாடுகிறான். காத்திரு மூங்கிலே காத்திரு! என்றேனும் ஒருநாள் உன்னை வண்டு துளைக்கும். நீ புல்லாங்குழலாவாய். பொறுத்திரு.







அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்

புல்லாங்குழலாச்சு



சங்கீதமே சந்நிதி

சந்தோஷம் சொல்லும் சங்கதி



**

கார்காலம் வந்தாலென்ன

கடுங்கோடை வந்தாலென்ன

மழைவெள்ளம் போகும்; கரை ரெண்டும் வாழும்



காலங்கள் போனாலென்ன

கோலங்கள் போனாலென்ன

பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்



அன்புக்கு உருவம் இல்லை

பாசத்தில் பருவம் இல்லை

வானோடு முடிவும் இல்லை

வாழ்வோடு விடையும் இல்லை




இன்றென்பது உண்மயே

நம்பிக்கை ஒன்றே நன்மையே



**

தண்ணீரில் மீன்கள் வாழும்

கண்ணீரில் காதல் வாழும்

ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே



பசியாறப் பார்வை போதும்

பரிமாற வார்த்தை போதும்

கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்



தலைசாய்க்க இடமா இல்லை

தலைகோத விரலா இல்லை

இளங்காற்று வரவா இல்லை

இளைப்பாறு பரவாயில்லை



நம்பிக்கையே நல்லது

எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது













1 comment:

சாகரன் said...

நான் மதிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று நண்பரே...
பகிர்ந்தமைக்கு வந்தனம்..!