Thursday, June 17, 2021

கவிதை ; கம்பராமாயணம் - கடவுள்



ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்


அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்


இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்


நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

கவிதை : மேயாத மான்

 அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்

வசமில்லா மொழியில் இதயம் எதையோ உளறும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்

வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில்
என் கண்களை இழந்தேன்

உன் ஞாபகம் தீயிட
விறகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நான் அதில்
அரியாசனம் செய்கிறேன்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அது போல் மனதை குடையும்

- விவேக் 

Tuesday, June 15, 2021

கவிதை : எனக்குள் ஒருவன்



வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே
வெண்சிறகேற்றாள் என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தேன் கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும் ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும் பூமழையே


- விவேக்