Thursday, September 30, 2004

கவிதை: குழப்பம்

அப்துல் ரகுமான்தனமாய் ஒரு கவிதை. **********************எனக்கு குழப்பமாய் இருக்கிறது********************** பித்தன் தனியே அமர்ந்து வானைப் பார்த்துக் கொண்டிருந்தான். "என்ன செய்கிறாய்?", என்று கேட்டேன். "குழம்பிக் கொண்டிருக்கிறேன்", என்றான். அவன் மேலும் சொன்னான். "நான் ஏற்கெனவே குழம்பி இருந்தேனா? அல்லது இப்பொழுதுதான் குழம்புகிறேனா? நான் குழம்பித்தான் இருக்கிறேனா? அல்லது தெளிவாய்த்தான் இருக்கிறேனா? இதுவே குழப்பமாய் இருக்கிறது? அப்படியென்றால் நான் குழம்பியிருக்கிறேன். இந்த குழப்பம் தெளிவு வந்ததனாலா? அல்லது தெளிவுதான் இப்பொழுது குழப்பம் ஆகிவிட்டதா? மொத்தத்தில் நான் குழம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது. அப்படியென்றால் நான் தெளிவாய் இருக்கிறேன். அதெப்படி? தெளிவும் குழப்பமும் சேர்ந்து வருமா? அதாவது தெளிவுதான் குழப்பமா? இல்லை குழப்பம்தான் தெளிவா? தெளிவென்றால் என்ன? குழப்பமென்றால் என்ன? இப்பொழுது தெளிவாகி விட்டது. தெளிவாக இருப்பதுதான் குழம்பும் குழம்புவதுதான் தெளியும். குழப்ப வைப்பது தெளிவு தெளிய வைப்பது குழப்பம். இப்படி இன்னும் எத்தனை குழப்பங்கள் என்னைக் குழப்பக் காத்திருக்கின்றனவோ? எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. இருந்தாலும் குழப்பமில்லாமல் தத்துவங்களும், விஞ்ஞானமும் இல்லை. ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததென்று குழம்பாவிடில் புவிஈர்ப்பின் அவசியம் தெரிந்திருக்காது. பறவைகள் மட்டுமேன் பறக்கின்றனவென்று குழம்பாவிடில் விமானத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்காது. ஆனால் இன்று நீங்கள் குழம்புவதை நிறுத்தி விட்டீர்கள். தெளிவு என்னும் அறியாமையில் மூழ்கி விட்டீர்கள். எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.அல்லது கண்மூடித்தன்மாய் எதிர்க்கத் தொடங்கி விட்டீர்கள். அதனால் குட்டையைப்போல் ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்து விட்டீர்கள். ஆதலால் எல்லோரும் குழம்பிக் கொண்டே இருங்கள். நதி போல் என்றும் பயணித்துக் கொண்டே இருங்கள்." நன்றி : "மரத்தடி"  ஆனந்த் பழனிசாமி. பா.நந்தன்

9 comments:

சுந்தரவடிவேல் said...

நன்று. குறிப்பாய் இது:
//குழம்புவதை நிறுத்தி விட்டீர்கள்.
தெளிவு என்னும் அறியாமையில்
மூழ்கி விட்டீர்கள்//

பா நந்தன் said...

எனது பெயர் ஆனந் பார்த்தசாரதி அல்ல நண்பரே. ஆனந்த் பழனிசாமி. அதோடு நான் பா நந்தன் என்னும் புனைப்பெயரிலேயே கவிதைகள் எழுதி வருகிறேன். இணையட்திலும் அப்படியே அறியப்படுகிறேன். அதனால் பா நந்தன் என்று குறிப்பிடவும். எனக்கு ஒரு மடல் அனுப்பிவிட்டு போட்டிருந்திருக்கலாம். இனி கவனமாய் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- பா நந்தன்.

Vaheesan said...

தவறுக்கு மிக்க மனம்வருந்துகிறேன்.

-வாகீசன்

பெயரில்லா said...

Feeling lonely? Hook up with Real Singles now for $4.99 to connect, and only $0.99 a min. A true match is only a phone call away. Give it a try 1-800-211-9293.

J S Gnanasekar said...

"ச்சே, எனது போகிமரத்தில் போட இப்படி ஒரு கவிதை தோணாமப் போச்சே" என்று தோன்றியது, இதைப் படித்து முடித்ததும். அருமையாகவும், தெளிவாகவும் எழுதி இருந்தீர்கள்.

-ஞானசேகர்

dwainbrinick6981280718 said...

Get any Desired College Degree, In less then 2 weeks.

Call this number now 24 hours a day 7 days a week (413) 208-3069

Get these Degrees NOW!!!

"BA", "BSc", "MA", "MSc", "MBA", "PHD",

Get everything within 2 weeks.
100% verifiable, this is a real deal

Act now you owe it to your future.

(413) 208-3069 call now 24 hours a day, 7 days a week.

பெயரில்லா said...

periya kumbiduda saami!

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty

sathish said...

:) Enakku oru Kulambi venum ippo