Sunday, September 19, 2004

நல்லதோர் வீணை செய்தே...

என் பாடல் பெட்டகத்திலிருந்து அண்மையில் கேட்க நேரிட்ட இப் பாரதியார் பாடல், என்னை மிகவும் பாதித்த பாடல்களில் ஒன்று.





நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?

சொல்லடி சிவசக்தி! - எனைச்

சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்,

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி! - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன், - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ

சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்; இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?





No comments: