Saturday, August 28, 2004

ஈகோ ...EGO !

அவன் ஒரு அரசன். 'தான்' என்ற அகங்காரம் நிரம்பியவன். வேட்டைக்குச்சென்ற போது ஒரு துறவியை சந்திக்க நேரிட்டது. கண் மூடித்தியானம் செய்துகொண்டிருந்தார் துறவி. " நான் பல நாடுகளை வென்றவன் அது இது என்றெலாம் தன்னைப் பற்றிக்கூறிய அரசன் எல்லம் தனக்கிருந்தும் தான் நிம்மதி இல்லாமல் இருப்பதாகக்கூறி தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என வினாவினான்.



தியானம் கலைந்த்தால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக, " நான் செத்தால்தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்.." என்று சொல்லிவிட்ட்டு மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

"நான் எத்தனை பெரிய அரசன் என்னையே அவமானப் படுத்துகிறாயா..?" என்றபடி கொஞ்சமும் சிந்திக்காமல் துறவியைக் கொல்வதற்காக கத்தியை உருவினான் அரசன். " அட மூடனே நான் என்றால், என்னைச் சொல்லவில்லை.. 'நான்' என்ற இறுமாப்பு செத்தால்தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும் .." என்று விளக்கினார் துறவி.



Edging God Out என்பதன் சுருக்கம் தான் EGO! அதாவது நம்மை விட்டு ஆனந்தம் அதாவது ஆண்டவன் வெளியேறும் நிலைதான் ஈகோ.











மூலம் : 'விகடன்' , சுவாமி சுகபோதானந்தாவின் "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்"

No comments: