Saturday, August 28, 2004

விட்டுப்போன வரிகள் ....

வைரமுத்துவின் முதல் திரைப்பாடலான "இது ஒரு பொன் மாலைப்பொழுது.." பாடலில் வரும் சரணங்கள் இரண்டைத்தான் அறிந்திருப்பீர்கள். ஆனால் அப்பாடலுக்காக அவர் எழுதியது 3 சரணங்கள். இதோ அந்த பாடல் விட்டுப்போன வரிகளுடன்..



முன்னுரை : ஓர் இளைஞன்; இயற்கை நேசன், கலைகளின் காதலன்; கனாக்களின் புத்திரன். சமூக பிரக்ஞையும் சற்றே உடையவன். அவன் மாலைப்பொழுதில் மயங்குகிறான். அந்தி வானத்தை ஆராதிக்கிறான். அந்த அழகில் ஆனந்திக்கிறான்



படம் : நிழல்கள் ( ஆம் 'நிழல்கள்' ரவியின் அறிமுகம் இந்தப்படத்தில் தான்)



இது ஒரு பொன் மாலைப் பொழுது - இது ஒரு

இது ஒரு பொன் மாலைப் பொழுது



வானமகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்



ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்

ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும்

பாடும் பறவைகள் கானமிடும்



பூமரங்கள் சாமரங்கள்

வீசாதோ?



வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதிதரும்

ஒரு நாள் உலகம் நீதி பெறும்

திருநாள் நிகழும் தேதி வரும்



கேள்விகளால் வேள்விகளை

நான் செய்வேன் ..



(விட்டுப்போனது)

இரவும் பகலும் யோசிக்கிறேன்

எனயே தினமும் பூசிக்கிறேன்

சாலை மனிதரை வாசிக்கிறேன்

தீயின் சிவப்பை நேசிக்கிறேன்



பேதங்களே வேதங்களா

கூடாது







2 comments:

Rasikai said...

ஆஹா எனக்கு மிகவும் பிடித்த பாடல் இணைப்புக்கு நன்றிகள்

பெயரில்லா said...

வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/06/blog-post_13.html?showComment=1402631677376#c4771738721863922113
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-