Wednesday, August 25, 2004

இலட்சியம் ...

இன்றைய இளைஞனே!



உனது பயணம் எதை நோக்கி என்று உன் பிம்பத்தை நீ கேட்டதுண்டா?



பிறப்பது நம் கையிலில்லை; இறப்பதும் நம் கையிலில்லை; வாழ்வதற்கு மட்டும் நாம் யார் என்ற வறட்டு வேதாந்தத்தின் மீது வாள் வீசு.



தன்னம்பிக்கையைச் சுட்டெரிக்கும் இலக்கியங்களையும் ஏற்பாடுகளையும் இடறிவிடு!



மரணம் மெய் என்பது எவ்வளவு பெரிய உண்மையோ - வாழ்வு பொய் என்பதும் அவ்வளவு பெரிய பொய்யே. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும் உண்மையானது.



அந்த நிமிஷங்கள்் இலட்சியங்களால் மட்டுமே கொளரவிக்கப்படுகின்றன. காலம் இறந்து விடுகிறது ஆனால் அது மனிதனின் செயல்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறது.



இன்று உனது இலட்சியம் என்ன? காற்றின் போக்கில் ப்றக்கும் காகிதமாய் நம்மில் பலருக்கு இலக்கு என்பது தீர்மானமாகாமலேயே இருக்கிறது.



உனது இலட்சியம் என்று நீ கோடு கிழித்துக்கூறுவது எதை?

மருத்துவராவது, பொறியியலாளராவது, ஆசிரியராவது எழுதுதாளராவது இவை போன்ற ஆசைகளுக்கெல்லாம் நீ இலட்சியங்கள் என்று நாமகரணம் சூட்டிக்கொள்ளக்கூடாது.



இவைகள் எல்லாம் இலட்சியங்கள் அல்ல; நீ தேர்ந்தெடுத்த துறைகள்.



இந்த துறையில் நீ வாழ நினைப்பது உன் விருப்பம்.

இந்த துறையை நீ வாழ வாழவைப்பது உன் இலட்சியம் .



நீ ஈடுபடும் துறையில் உன் பெயர் சொல்லும் முத்திரை என்ன?

குறைந்தபட்சம் உன் இலட்சியம் என்பது அதுதான்.



மூலம்: வைரமுத்துவின் " சிற்பியே உன்னை செதுக்குகிறேன்"



No comments: