Thursday, September 30, 2004
கவிதை: குழப்பம்
அப்துல் ரகுமான்தனமாய் ஒரு கவிதை. **********************எனக்கு குழப்பமாய் இருக்கிறது********************** பித்தன் தனியே அமர்ந்து வானைப் பார்த்துக் கொண்டிருந்தான். "என்ன செய்கிறாய்?", என்று கேட்டேன். "குழம்பிக் கொண்டிருக்கிறேன்", என்றான். அவன் மேலும் சொன்னான். "நான் ஏற்கெனவே குழம்பி இருந்தேனா? அல்லது இப்பொழுதுதான் குழம்புகிறேனா? நான் குழம்பித்தான் இருக்கிறேனா? அல்லது தெளிவாய்த்தான் இருக்கிறேனா? இதுவே குழப்பமாய் இருக்கிறது? அப்படியென்றால் நான் குழம்பியிருக்கிறேன். இந்த குழப்பம் தெளிவு வந்ததனாலா? அல்லது தெளிவுதான் இப்பொழுது குழப்பம் ஆகிவிட்டதா? மொத்தத்தில் நான் குழம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது. அப்படியென்றால் நான் தெளிவாய் இருக்கிறேன். அதெப்படி? தெளிவும் குழப்பமும் சேர்ந்து வருமா? அதாவது தெளிவுதான் குழப்பமா? இல்லை குழப்பம்தான் தெளிவா? தெளிவென்றால் என்ன? குழப்பமென்றால் என்ன? இப்பொழுது தெளிவாகி விட்டது. தெளிவாக இருப்பதுதான் குழம்பும் குழம்புவதுதான் தெளியும். குழப்ப வைப்பது தெளிவு தெளிய வைப்பது குழப்பம். இப்படி இன்னும் எத்தனை குழப்பங்கள் என்னைக் குழப்பக் காத்திருக்கின்றனவோ? எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. இருந்தாலும் குழப்பமில்லாமல் தத்துவங்களும், விஞ்ஞானமும் இல்லை. ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததென்று குழம்பாவிடில் புவிஈர்ப்பின் அவசியம் தெரிந்திருக்காது. பறவைகள் மட்டுமேன் பறக்கின்றனவென்று குழம்பாவிடில் விமானத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்காது. ஆனால் இன்று நீங்கள் குழம்புவதை நிறுத்தி விட்டீர்கள். தெளிவு என்னும் அறியாமையில் மூழ்கி விட்டீர்கள். எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.அல்லது கண்மூடித்தன்மாய் எதிர்க்கத் தொடங்கி விட்டீர்கள். அதனால் குட்டையைப்போல் ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்து விட்டீர்கள். ஆதலால் எல்லோரும் குழம்பிக் கொண்டே இருங்கள். நதி போல் என்றும் பயணித்துக் கொண்டே இருங்கள்." நன்றி : "மரத்தடி" ஆனந்த் பழனிசாமி. பா.நந்தன்
Wednesday, September 29, 2004
கவிதை: விடுதலை..
"நேற்று என் தந்தை தோண்டினார்
நீரும், எண்ணெயும் தந்தது இப்பூமி
இன்று நான் தோண்டுகிறேன்
அங்கங்கே வெடிகுண்டுகளும் கிடைக்கின்றன
நாளை என் மகன் தோண்டினால்
எங்கும் எலும்புக்கூடுகள்தான் இருக்குமோ?"
நன்றி:- திரு.த.ஸ்டாலின் குணசேகரன்
நீரும், எண்ணெயும் தந்தது இப்பூமி
இன்று நான் தோண்டுகிறேன்
அங்கங்கே வெடிகுண்டுகளும் கிடைக்கின்றன
நாளை என் மகன் தோண்டினால்
எங்கும் எலும்புக்கூடுகள்தான் இருக்குமோ?"
நன்றி:- திரு.த.ஸ்டாலின் குணசேகரன்
Wednesday, September 22, 2004
கவிதை: இருக்கிறேனம்மா இருக்கிறேன்..
என்னைப் பிரிந்துவிட்ட என்னருமைச் சொந்தமொன்றுக்காக இக்கவிதையை இங்கே அர்பணிக்கிறேன்....
பாலமிட்ட உறவுநிலா பாலைநதி அலையாக
காலவெளிச் சோலைகளில் கலக்கமலர் பூத்ததென்ன!
எண்ணச் சிறகுகளை எவர்வெட்டிப் போட்டாலும்
கண்ணில் பழையநிலா கவிபேசத் தவறவில்லை.
சாகாத நினைவே தங்கமே! இந்நாளில்
நோகாமல் என்னெஞ்சை நூல்போட்டுச் சுமக்கிறது
இன்னும் மனக்குளத்தில் ஏக்கப் படகுவர
என்னை நினைப்பாயோ? எண்ணாமல் இருப்பாயோ?
அந்தப் பனிநாட்கள் ஐயோ ! என் கற்பகமே!
எந்தப் பிறவியிலே எப்போது இனிவருமோ?
தொட்டுப் படிக்காத தொடர்கதையே! ஏனம்மா
விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டாய்?
போனகதை போனதென்றா பூமியிலே நானிருப்பேன்?
ஏனம்மா தெரியாதா? இருக்கிறதே ஓரிதயம்!
உன்னினைவுச் சுமையென்றன் ஒளிநெஞ்சில் இல்லையென்றால்
என்னிதயம் என்னிதயம் எப்போதோ கனத்திருக்கும்.
இதயவிழி தனைமெல்ல எண்ண இமை மூடட்டும்!
வதங்கிவிட்ட மலர் போல்என் வாழ்நாளும் முடியட்டும்!
அங்கும் என் அழகே! உன் அன்புரசப் பிஞ்சுமுகம்
மங்காமல் மின்னியென்றன் மடிமீது மலரட்டும்!
- நன்றி : வைரமுத்துவின் "வைகறை மேகங்கள்"
பாலமிட்ட உறவுநிலா பாலைநதி அலையாக
காலவெளிச் சோலைகளில் கலக்கமலர் பூத்ததென்ன!
எண்ணச் சிறகுகளை எவர்வெட்டிப் போட்டாலும்
கண்ணில் பழையநிலா கவிபேசத் தவறவில்லை.
சாகாத நினைவே தங்கமே! இந்நாளில்
நோகாமல் என்னெஞ்சை நூல்போட்டுச் சுமக்கிறது
இன்னும் மனக்குளத்தில் ஏக்கப் படகுவர
என்னை நினைப்பாயோ? எண்ணாமல் இருப்பாயோ?
அந்தப் பனிநாட்கள் ஐயோ ! என் கற்பகமே!
எந்தப் பிறவியிலே எப்போது இனிவருமோ?
தொட்டுப் படிக்காத தொடர்கதையே! ஏனம்மா
விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டாய்?
போனகதை போனதென்றா பூமியிலே நானிருப்பேன்?
ஏனம்மா தெரியாதா? இருக்கிறதே ஓரிதயம்!
உன்னினைவுச் சுமையென்றன் ஒளிநெஞ்சில் இல்லையென்றால்
என்னிதயம் என்னிதயம் எப்போதோ கனத்திருக்கும்.
இதயவிழி தனைமெல்ல எண்ண இமை மூடட்டும்!
வதங்கிவிட்ட மலர் போல்என் வாழ்நாளும் முடியட்டும்!
அங்கும் என் அழகே! உன் அன்புரசப் பிஞ்சுமுகம்
மங்காமல் மின்னியென்றன் மடிமீது மலரட்டும்!
- நன்றி : வைரமுத்துவின் "வைகறை மேகங்கள்"
Subscribe to:
Posts (Atom)