Friday, February 28, 2014
நீ கவிஞனா?
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...
அஞ்சாதா சிங்கமென்றும்அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.பிஞ்சான நெஞ்சினர் முன்பேதையர்முன் ஏழையர் முன்நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதிதன்குடும்பம்தான்வாழ தனியிடத்துபஞ்சாங்கம் பார்த்திருக்கும்பண்புடையான் கவிஞனெனில்நானோ கவிஞனில்லைஎன்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்துபணத்தறிவை தனக்குவைத்துதொகுத்துரைத்த பொய்களுக்கும்சோடனைகள் செய்து வைத்துநகத்து நுனி உண்மையின்றிநாள்முழுதும் வேடமிட்டுமடத்தில் உள்ள சாமிபோல்மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியாமானிடத்து தலைவரென்றுபிழைத்திருக்கும் ஆண்மையில்லாபேதையனே கவிஞனெனில்நானோ கவிஞனில்லைஎன்பாட்டும் கவிதையல்ல.
Friday, January 03, 2014
சாதிக்கும் வயதில்
அம்மணமா நடிச்சபோது..
அங்கமெல்லாம் தங்கமுன்னு
வருணிச்சு ரசித்தவந்தான்..
அம்மன் வேசம் போட்டவுடன்..
ஆத்தா..மகமாயின்னு
கன்னத்துல போட்டுக்கறான்..
என்னத்த நாஞ்சொல்ல?..
டாஸ்மாக் கடை ஒருபுறம்
டண்டணக்கா நடிகை போஸ்டர் மறுபுறம்
அரசு அறிவிப்பு
"சாதிக்கும் வயதில் சபலம் வேண்டாம்"
அடடா...அருமை...அற்புதம்
@நன்றி சிற்பி இரகுநாதன்
அங்கமெல்லாம் தங்கமுன்னு
வருணிச்சு ரசித்தவந்தான்..
அம்மன் வேசம் போட்டவுடன்..
ஆத்தா..மகமாயின்னு
கன்னத்துல போட்டுக்கறான்..
என்னத்த நாஞ்சொல்ல?..
டாஸ்மாக் கடை ஒருபுறம்
டண்டணக்கா நடிகை போஸ்டர் மறுபுறம்
அரசு அறிவிப்பு
"சாதிக்கும் வயதில் சபலம் வேண்டாம்"
அடடா...அருமை...அற்புதம்
@நன்றி சிற்பி இரகுநாதன்
Monday, October 07, 2013
சுயம்
தன்னை அறிந்தவன்.....
உலகம் அறிகின்றான்!
தன்னை அளந்தவன்.....
உலகம் அளக்கின்றான்!
தன்னைத் துறந்தவன்....
துன்பம் துறக்கின்றான்!
தன்னைத் திறந்தவன்...
'சொர்க்கம்' திறக்கின்றான்!
தன்னில் நிலைத்தவன்...
உலகில் நிலைக்கின்றான்!
தன்னில் நிறைந்தவன்
உலகை நிறைக்கின்றான்!
-யாழ் சுதாகர்
உலகம் அறிகின்றான்!
தன்னை அளந்தவன்.....
உலகம் அளக்கின்றான்!
தன்னைத் துறந்தவன்....
துன்பம் துறக்கின்றான்!
தன்னைத் திறந்தவன்...
'சொர்க்கம்' திறக்கின்றான்!
தன்னில் நிலைத்தவன்...
உலகில் நிலைக்கின்றான்!
தன்னில் நிறைந்தவன்
உலகை நிறைக்கின்றான்!
-யாழ் சுதாகர்
Subscribe to:
Posts (Atom)