Friday, January 03, 2014

சாதிக்கும் வயதில்

அம்மணமா நடிச்சபோது..
அங்கமெல்லாம் தங்கமுன்னு
வருணிச்சு ரசித்தவந்தான்..
அம்மன் வேசம் போட்டவுடன்..
ஆத்தா..மகமாயின்னு
கன்னத்துல போட்டுக்கறான்..
என்னத்த நாஞ்சொல்ல?..

டாஸ்மாக் கடை ஒருபுறம்
டண்டணக்கா நடிகை போஸ்டர் மறுபுறம்
அரசு அறிவிப்பு
"சாதிக்கும் வயதில் சபலம் வேண்டாம்"
அடடா...அருமை...அற்புதம்

@நன்றி சிற்பி இரகுநாதன்

Monday, October 07, 2013

சுயம்

தன்னை அறிந்தவன்.....
உலகம் அறிகின்றான்!

தன்னை அளந்தவன்.....
உலகம் அளக்கின்றான்!

தன்னைத் துறந்தவன்....
துன்பம் துறக்கின்றான்!

தன்னைத் திறந்தவன்...
'சொர்க்கம்' திறக்கின்றான்!

தன்னில் நிலைத்தவன்...
உலகில் நிலைக்கின்றான்!

தன்னில் நிறைந்தவன்
உலகை நிறைக்கின்றான்!

-யாழ் சுதாகர்

Friday, September 27, 2013

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்

நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே

பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

**

சில காலமாய் - நானும்
சிறை வாழ்கிறேன்
உனைப்பார்த்ததால் தானே
உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள்தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு

**

குலதெய்வமே எந்தன்
குறை தீர்க்கவா
கைநீட்டினேன் என்னைக்
கரை சேர்க்கவா

நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா

நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர்காய்கிறேன்!
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்