Friday, September 27, 2013

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்

நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே

பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

**

சில காலமாய் - நானும்
சிறை வாழ்கிறேன்
உனைப்பார்த்ததால் தானே
உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள்தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு

**

குலதெய்வமே எந்தன்
குறை தீர்க்கவா
கைநீட்டினேன் என்னைக்
கரை சேர்க்கவா

நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா

நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர்காய்கிறேன்!
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்

அம்மா


அம்மா

பாக்கிரீடப் பாரதியல்ல - நான்
பொங்குதமிழ்த் தாசனுமல்ல;
கோக்குறிஞ்சி இளங்கோவல்ல - நான்
கம்பனெனும் தேனும் அல்ல;
தீக்கருகு கீரனுமல்ல - நான்
தெள்ளு தமிழ் வள்ளுவனல்ல;
சேக்கிழார்ச் செம்மலுமல்ல - நான்
சீத்தலைச் சாத்தனுமல்ல;
காக்கையொன்றின் பொன்குஞ்சு - அதில்
உவகையுறும் என்னெஞ்சு!
ஆக்கியென்னை அளித்தவளும்
அள்ளியணைத்துக் காத்தவளும்
தூக்கியென்னை வளர்த்தவளும்
துணிவு நேர்மை தந்தவளும்
வாக்கியத்தை விதைத்தவளும் - அதை
விருட்சமாக வளர்த்தவளும்
பாக்கியமே நான் செய்தேன்
பெற்றிடவே இத்தாயை!


by