Tuesday, June 15, 2021

கவிதை : எனக்குள் ஒருவன்



வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே
வெண்சிறகேற்றாள் என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தேன் கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும் ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும் பூமழையே


- விவேக்

Sunday, June 13, 2021

கவிதை: மாறா

 அலைவார் அவரெல்லாம் தொலைவார்... வசனம் தவறு

அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது.
அடங்காத நாடோடி காற்றல்லவா?
விடை இலாத பல வினாவும் எழ 
தேடல் தொடங்கும்!
விலை இலாத ஒரு 
வினோத சுகம் தோன்றும்!

_தாமரை 

Saturday, June 12, 2021

கவிதை: ராசாளி



முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பை
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
வாவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
குளிர்காய்கின்ற தீ


_தாமரை